Skip to content
Home » மூர்க்கத்தனமான பாதுகாவலர் ‘ஜெ’.. அமெரிக்க அமைச்சர் புகழாராம்..

மூர்க்கத்தனமான பாதுகாவலர் ‘ஜெ’.. அமெரிக்க அமைச்சர் புகழாராம்..

2017 முதல் 2019 வரை அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி வகித்தார். அவரது ஆட்சி காலத்தில் 2017-18 வரை அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ தலைவராக இருந்தவர் மைக் பாம்பியோ. சிஐஏ தலைவராக இருந்த அவர் 2018 முதல் 2021 வரை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை மந்திரியாக செயல்பட்டார். இதனிடையே, மைக் பாம்பியோ தான் எழுதிய ஒரு இன்ச் விட்டுக்கொடுக்கமாட்டோம்; நான் நேசித்த அமெரிக்காவுக்கான போராட்டம்’ என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இந்த புத்தகத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் எழுதியுள்ளார். இந்தியா உள்பட பலநாடுகள், நாடுகளின் தலைவர்கள் குறித்து அவர் தனது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த காலகட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரிகளுடான உறவு குறித்து மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பாம்பியோ அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த கால கட்டத்தில் இந்தியா வெளியுறவுத்துறை 2 மந்திரிகளை கண்டது.பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசில் 2014 முதல் சுஸ்மா சுவராஜ் இந்திய வெளியுறவுத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார். அவர் 2019-ம் ஆண்டு உயிரிழந்த நிலையில் ஜெய் சங்கர் இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக நியமிக்கப்பட்டார். இந்த சூழ்நிலையில் தான் சந்தித்த இந்தியாவின் 2 வெளியுறவுத்துறை மந்திரிகள் குறித்து மைக் பாம்பியோ தனது புத்தகத்தில் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு:- இந்திய தரப்பை பொறுத்தவரை எனது உண்மையான எதிர்தரப்பான இந்திய வெளியுறவுத்துறை கொள்கை அணியில் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கிய நபர் (வெளியுறவுத்துறை மந்திரி சுஸ்மா சுவராஜ்) இல்லை. மாறாக பிரதமர் மோடியின் மிகவும் நெருக்கமான நம்பகத்தன்மை கொண்ட தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் நான் மிகவும் நெருக்கமாக வேலை செய்தேன். எனது 2-வது இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுப்ரமணியம் ஜெய்சங்கர். இந்தியாவின் புதிய வெளியுறவுத்துறை மந்திரியாக நாங்கள் ‘ஜெ’ வை (ஜெய்சங்கர்) வரவேற்றோம். அவரை விட சிறந்த எதிர்தரப்பு வெளியுறவுத்துறை மந்திரியை நான் கேட்டிருக்க முடியாது. நான் அவரை மிகவும் நேசித்தேன். அவர் பேசும் 7 மொழிகளில் ஆங்கிலமும் ஒன்று. அவரது ஆங்கிலம் என்னை விட சிறப்பாக இருந்தது. ஜெய்சங்கர் தொழில்முறை கொண்ட, பகுத்தறிவானவர். தனது நாட்டையும், தனது தலைவரையும் பாதுகாக்கும் மிகவும் மூர்க்கத்தனமாக பாதுகாவலர் ஜெய்சங்கர் ‘ என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!