தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை கருப்பட்டையான்குளத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளியில் ஆசிரியர்கள் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் அப்துல் ரஹீம் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை லீலாவதி முன்னிலை வகித்தார். ஆசிரியர் பிரேமா அனைவரையும் வரவேற்றினார்.
சிறப்பு விருந்தினராக தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராஹிம் பசுபதி கோவில் பள்ளி வாசல் இம்மாமும் அரபி, ஆசிரியர் ஜனாப் ஜாஹிர் ஹூசைன் ஆகிோர் கலந்து கொண்டு பேசினர். பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் வழங்கினர். ஆசிரியர்கள் தின விழாவை பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆசிரியை நித்யா நன்றி கூறினார்.