அமெரிக்காவில் வரும் நவம்பர் 5ம் தேதி அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரீசும், குடியரசு கட்சி சார்பில், ட்ரம்ப் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தல் குறித்து ரஷ்ய அதிபர் புதின் கருத்து தெரிவித்து உள்ளார். அதில், அமெரிக்க தேர்தலில் கமலாவுக்கே தனது ஆதரவு என்றும், ஏற்கனவே ட்ரம்ப் அதிபராக இருந்தபோது ரஷியாவிற்கு எதிராக பல கட்டுப்பாடுகளையும் தடைகளையும் விதித்தார். கமலா ஹாரிஸ் அத்தகைய செயல்களை செய்ய மாட்டார் என்று நினைக்கிறேன் என கூறி உள்ளார்.