கரூர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்த கரூர் லைட்ஹவுஸ் முனைபகுதியில் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. திமுக பொதுக்கூட்டம் சுபாஷ் சந்திரபோஸ் சிலை அருகே சுமார் அரை கிலோமீட்டருக்குள் இருப்பதால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் எனக் கூறிய போலீசார் வேலுசாமிபுரத்தில் நடத்த அறிவுறுத்தினர். வேலுசாமிபுரம் வேண்டாம் என கூறிய கரூர் அதிமுகவினர் கரூர் 80 அடி சாலையில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டனர். அந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க முடியாது கூறிவிட்டனர். இது குறித்து மா.செ எம் ஆர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் நாங்க என்ன பண்றதுனேனு தெரியல என புலம்பினார்…இது குறித்து அதிமுகவில் உள்ள விஜயபாஸ்கருக்கு எதிர் கோஷ்டியினர், வேண்டுமென்றே அந்த இடம் தான் வேண்டும் என கேட்டால் போலீசார் என்ன செய்வார்கள்?. இவர் மந்திரியாக இருந்த போது சும்மாவா இருந்தாரா? அன்னைக்கு செஞ்சார் இன்னைக்கு அனுபவிக்கிறார் என கமெண்ட் அடிக்கின்றனர். அதிமுக ஆட்சியின் போது கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சுமார் 80க்கும் மேற்பட்ட பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறிப்பிடதக்கது..