கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ராயனூர் தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் வீரமலை. இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புனிதா. இருவருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் புனிதாவின் தம்பி புவின் என்பவர் தனது அக்காவை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்காக, திருமாநிலையூர் பேருந்து நிறுத்தத்தில், அரவக்குறிச்சி அடுத்த நஞ்சைக்காளிக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பெரியம்மா மகன் கபில் தேவ் (எ) சங்கருடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த வீரமலை வாக்குவாதத்தில் ஈடுபட்டு புவினை அடித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இருவருக்கும் ஏற்பட்ட சண்டையை விலக்கி விட குறுக்கே வந்த கபில்தேவ் மீது, வீரமலை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டார்.
இதில் படுகாயமடைந்த கவின்தேவ் உயிருக்கு ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து வீரமலையை தேடி வருகின்றனர்.