தமிழ்நாடு முழுவதும் கடந்த ஜூன் 9 ம் தேதி கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளில் சேர்வதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடந்தது. 6344 பணியிடங்களுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 15.8 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இதன் மூலம் ஒரு இடத்திற்கு 254 பேர் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்வின் முடிவுகள் அடுத்த மாதம்(அக்டோபர்) வெளியிடப்படும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது.