ராஜஸ்தான் கங்காபூர் பகுதியைச் சார்ந்த புவனேஷ் குமார் ஜகா என்பவர் இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தி கங்காபூர் பகுதியில் இருந்து தொடங்கிய சைக்கிள் பயணம் நான்கு மாநிலத்தை தாண்டி தமிழ்நாடு வழியாக ராமேஸ்வரத்தில் நிறைவடைய உள்ளது. சைக்கிள் விழிப்புணர்வு பயணம் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி கங்காபூர் பகுதியில் இருந்து தொடங்கியது. ராமேஸ்வரம் சென்றார்.
இவர் வழிநெடுகிலும் உள்ள கோவில்கள், பள்ளிகள், முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உறங்கி விட்டு
ஆங்காங்கே கிடைக்கும் உணவுகளை அருந்தி தனது சைக்கிள் பயணத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
பொதுமக்களிடம் இயற்கையின் நன்மைகள் குறித்தும், இயற்கையை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும், மரம் நடுவதால் பயன்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பயணத்தை தொடங்கி ஆறு மாதங்களுக்கும் மேலாக சைக்கிளில் வெற்றிகரமாக தமிழ்நாடு வந்தடைந்த அவர் சேலம் வழியாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள மணல்மேடு வழியாக ராமேஸ்வரத்திற்கு செல்ல உள்ளார்.
குறிப்பாக புவனேஷ் 17 டிசம்பர் 2023 மற்றும் 13 ஜனவரி 2024க்கு இடையில் கங்காபூர் நகரத்திலிருந்து அயோத்திக்கு 800 கிலோமீட்டர் நடைப்பயணத்தையும் மேற்கொண்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.