உத்தரப் பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய்களின் தாக்குதல் தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஓநாய்கள் கூட்டம் தாக்கியதில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். பஹ்ரைச் மாவட்டத்தில் மட்டும் கடந்த ஒன்றரை மாதத்தில் 8 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் என ஒன்பது பேர் ஓநாய் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அந்த மாவட்டத்தில் உள்ள 35 கிராமங்களுக்கு ஓநாய்கள் தாக்குதலுக்கான முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.
மக்களை அச்சுறுத்தி வரும் ஓநாய்களை பிடிப்பதற்காக வனத்துறை ‘ஆபரேஷன் பேடியா’ என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் ட்ரோன் மூலம் கண்காணித்து இதுவரை 4 ஓநாய்களை பிடித்து அப்புறப்படுத்தி உள்ளனர். மேலும் 2 ஓநாய்கள் அந்த பகுதியில் சுற்றித்திரிவதாக கண்டுபிடித்து உள்ளனர். அவற்றையும் பிடிக்க மயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஓநாய்கள் சிக்காவிட்டால் அவற்றை சுட்டுத்தள்ள வனத்துறை, காவல்துறைக்கு மாநில அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.