தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்து பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நாய்களை கட்டுப்படுத்த இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அடுத்துள்ள 11 ஆவது வார்டு மொழிஷா நகர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு உள்ளது . இந்நிலையில் சையது மசூத், சாகின் ஷிவா தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் அருகாமையில் நின்று கொண்டிருந்த பொழுது
தெருவில் சுற்றித்திரிந்த பத்துக்கு மேற்பட்ட தெரு நாய்கள் சிறுவனை துரத்தி கடித்துள்ளது. இதில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுவன் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். பள்ளப்பட்டி பகுதியில் சுற்றித் திரியும் நாய்களை உடனடியாக நகராட்சி நிர்வாகம் கட்டுப்படுத்தக் வேண்டும் எனவும்,இதுபோல சம்பவம் மீண்டும் நடக்க கூடாது என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்