அரியலூர் நகரில் திருச்சி சாலையிலுள்ள LIC கிளை அலுவலகத்தில் இன்சூரன்ஸ் வார விழாநடைபெற்றது.அரியலூர் LIC கிளை முதுநிலை மேலாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய தலைவர் தமிழ்செல்வி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில் எல்ஐசியின் செயல்பாடுகள் மற்றும் தற்போதுள்ள காப்பீடு நிலவரங்கள் குறித்து எடுத்துரைக்கபட்டது.
மேலும் நுகர்வோர் சட்ட திட்டங்கள் குறித்தும் விளக்கப்பட்டது. வருகிற 7 ம் தேதி LIC ஊழியர்கள் மற்றும் முகவர்களுக்கான பல்வேறு போட்டிகள் மற்றும் ரத்ததான முகாம், பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கபட்டது. இதில் LIC முகவர்கள் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.