ஈரோடு கிழக்கு இடைத்தேர்ததில் திமுக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் ஈ.வி.கே. எஸ்.இளங்கோவனுக்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக அறிவித்தார். இதற்கு ஈ.வி.கே. இளங்கோவன் நின்றி தெரிவித்தார். இந்த நிலையில் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஆதரவு வழங்கியுள்ள கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நடைபெறவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.