Skip to content
Home » 3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

3% கமிஷன் வழங்க வேண்டும் நில வணிக தொழில் முனைவோர் கோரிக்கை

கோவையில் நில வணிக தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் புலிய குளம் பகுதியில் உள்ள  ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவர் மருரா கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இதில்,மாநில செயலாளர் வேலுசாமி மாநில சங்க கௌரவ தலைவர் காளிமுத்து,மாநில ஆலோசனை கமிட்டி தலைவர் பழனியப்பன் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்..

கூட்டத்தி்ல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நில வணிக தொழில் சார்ந்த பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சங்கத்தின் நிறுவன தலைவர் மருரா கருணாகரன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நில வணிக இடைத்தரகர்களை ஒருங்கிணைத்து, அவர்கள் நலம் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளதாக தெரிவித்தார்..

கூட்டத்தில்,
இது வரை இந்த தொழிலில் எந்தவித அங்கீகாரம் இல்லாமல் நிலையற்ற முறையில் உள்ள இடைத்தரகர்களுக்கு தொழில் சார்ந்த அங்கீகார அடையாள அட்டையை அரசு வழங்க வேண்டும்,

இதுவரை ஒரு கோடி ரூபாய் வரையில் இரண்டு சதவீதமாக இருந்த கமிஷனை இனி வரக்கூடிய காலங்களில் மூன்று சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்,

ஒரு கோடி ரூபாய்க்கு மேல் நடைபெறும் வணிகத்தில் இரண்டு சதவீத கமிஷனை  வரைமுறைப்படுத்தி தரவேண்டும்,

இந்த தொழிலுக்கு என தனி வாரியத்தை அமைக்க வேண்டும்,

நில வணிகம் நடைபெறும் போது விட்னஸ் கையெழுத்தில் இடைத்தரகர்களின் சீல் கட்டை,கையெழுத்து போன்றவற்றை கட்டாயமாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் சங்கத்தின் மாநில,மாவட்ட நிர்வாகிகள்
தென்னரசு, முத்துசாமி,வெங்கடேஷ்,
நித்யானந்தம்,வெங்கிடுசாமி உட்பட மாநில,மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!