கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமையில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த வாரம் திங்கட்கிழமை அரசு விடுமுறை தினம் என்பதால் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறவில்லை. இன்று வழக்கம் போல் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்களுடைய தனிப்பட்ட பிரச்சினைகள், பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வருகை தந்தனர். வழக்கம் போல் மனுக்களை பதிவு செய்து விட்டு மாவட்ட ஆட்சியரிடம் வழங்குவதற்காக 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மனு அளித்தனர்.
கடுமையான வெயில் என்பதால் வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள கையில் இருந்தவற்றை தலையில் வைத்துக் கொண்டு வரிசையில் காத்திருந்தனர். பொதுவாக மனு கொடுக்க, பொதுமக்கள் உள்ளே செல்லும் இடத்திற்கு அருகில் கீற்றுக் கொட்டகை அமைக்கப்பட்டு, அதில் பொதுமக்களை காத்திருக்க வைத்து மனுக்களை ஆட்சியரிடம் வழங்கி வந்தனர்.
தற்போது அவை அகற்றப்பட்டு புதிதாக செட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் வெயிலில் நின்று மனு கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்று மனு கொடுக்க வந்த மக்கள்
கூறினர்.