கோவை மாவட்டம் வால்பாறையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 1500கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். மேலும் பல மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து ஹாஸ்டல் மற்றும் அறை வாடகைக்கு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துமனை மூலம் மகளிர் ஒருங்கிணைந்த சேவை மையம் சார்வில் இந்த கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கடந்த 30ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது சில மாணவிகள் சோர்வு அடைந்திருத்தை கண்டு விசாரணை மேற்கொண்டபோது அந்த மாணவிகள் தங்களுக்கு கல்லூரியில் பாலியல் தொல்லை ஏற்படுவதாக தெரிவித்தனர்.
சில பேராசிரியர்கள், லேப் டெக் னிசியன் போன்றோர் தங்கள் மீது கையை வைப்பதும், தவறாக நடந்து கொள்வதும், வாட்சாப்பில் தவறான மெசேஜ் அனுப்புவது போன்ற செயல்களில் ஈடுபாடுவதாக தெரிவித்ததை அடுத்து பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் கல்லூரியில் பணியாற்றி வந்த தற்காலிக உதவி பேராசிரியர்கள் சதீஷ்குமார், முரளிராஜ்இ ராஜபாண்டிஇ லேப் டெக் னிசியன் அன்பரசு ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதை உறுதி செய்து மாவட்ட கண்காணிப்பளர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் வால்பாறை உதவி கண்கணிப்பாளர் தலைமையில் பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மேனகா வழக்குப்பதிவு செய்து 3 உதவி பேராசிரியர் உள்பட 4பேரையும் கைது செய்து வால்பாறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் வால்பாறை மாணவ மாணவியர் மற்றும் பெற்றோர் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது