நிலத்தடி நீரை பாதுகாக்க வழிவகுக்கும் பனைமரத்தை காவல் தெய்வமாக தமிழர்கள் வழங்கிவரும் நிலையில் பனையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரம் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளின் இருபுறங்களிலும் 1கோடி பனைவிதைப்பினை தன்னார்வலர்கள் அரசுடன் இணைந்து இப்பணியை வருகிற 22ஆம் தேதி முதல் தொடங்க உள்ளனர்.
இந்த நிலையில் ஒரு கோடி பனை மரம் நடும் நோக்கத்தோடு ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் நினைவு இடத்தில் கடந்த ஜூலை 27 அன்று பனை விதைகள் சேகரிக்கும் பணியை மேற்கொண்டு பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பனை விதைகளை சேகரிப்பு பணியில் ஈடுபட்ட வந்தனர்.
தற்போது இன்றைய தினம் திருச்சி மாவட்டம் பெட்டவாய்தலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றின் கரையில் இவ்வளவு நாட்கள் சேகரித்த பனை விதைகளை நடும் பணியை மேற்கொண்டனர். இந்த நிகழ்வில் பிரபல டிவி
மற்றும் திரைப்பட நடிகையும்மான அறந்தாங்கி நிஷா கலந்துகொண்டு பனை விதைகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் தமிழ் நாடு தன்னார்வலர் தலைவர் ஹரிகிருஷ்ணன், திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொங்குவேலு உட்பட ஏராளமான தன்னார்வலர்கள் பொதுமக்கள் குழந்தைகள் என பலர் கலந்து கொண்டு பனை விதையின் சிறப்புகளை தெரிந்து கொண்டு 1000 பனை விதைகளை நடவு செய்தனர்..
பின்னர் அறந்தாங்கி நிஷா நகைச்சுவையாக பேசுகையில்…
காவிரி கரையோரப் பகுதிகளில் நிறைய குடிமகன்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு நிச்சய மரியாதை தரவேண்டும் இல்லை என்றால் சண்டைக்கு வந்து விடுவார்கள்..
காவிரி கரையோரப் பகுதிகளில் குடிக்கும் குடிமகன்கள் குடித்துவிட்டு பாட்டிலை அப்படியே விட்டு விட்டு சென்று விடுகிறார்கள் அவர்கள் சமூகத்திற்கு நல்லது செய்யவில்லை என்றாலும் சமூகத்திற்கு சீர்கேடுகளை நிறைய செய்கிறார்கள் அவர்கள் விட்டுச் செல்லும் பாட்டில்கள் அனைத்தையும் சேகரித்து அதில் இருந்து வரும் தொகையை ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கி வரும் தனபால் என்ற என்ற தன்னார்வலரை வெகுவாக பாராட்டினார்…