மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும் வந்தே பாரத் ரயில் இன்று மதியம் ஒரு மணி அளவில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி வாயிலாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக வந்தே பாரத் ரயில் மதுரையிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல், திருச்சி வழியாக கரூர்
வந்தடைந்தது. திடீரென்று ரயில் வருவதற்கு முன் மழை பெய்ததால் சாரல் மலையிலும் வந்தே பாரத் ரயிலை பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மலர் தூவி வரவேற்றனர்.
அதன் தொடர்ச்சியாக பயணிகள் அனைவரும் கரூர் ரயில் நிலையத்தில் இறங்கிய பிறகு பாஜக நிர்வாகிகள் அனைவரும் வந்தே பாரத் ரயிலில் ஏறினார். அதைத் தொடர்ந்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கொடியசைத்து ரயிலை வழி அனுப்பி வைத்தார். தொடர்ந்து வந்தே பாரத் ரயில் இருந்து புறப்பட்டு நாமக்கல், சேலம் வழியாக இன்று 9.30 மணி அளவில் பெங்களூர் சென்றடைகிறது. அதன் தொடர்ச்சியாக நாமக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. மேலும் இந்த வந்தே பாரத் ரயில் வருகின்ற இரண்டாம் தேதி முதல் நாள்தோறும் மதுரையில் இருந்து பெங்களூர் வரை இயக்கப்படுகிறது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை வந்தே பலத்த ரயில் இயக்கப்படாது என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.