Skip to content
Home » கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

கார் பந்தயம் … இரவு 8 மணிக்குள் சான்று பெற கெடு…

சென்னை தீவுத்திடலில் திட்டமிட்டபடி ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 2:45 மணிக்கு தொடங்க இருந்த கார் பந்தயம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்னும் தொடங்கவில்லை. மேலும் சர்வதேச மோட்டார் அமைப்பு ஆய்வை முடிக்கவில்லை. பந்தய சாலையில் ஆய்வுப் பணியை இன்னும் முடிக்காததால் பயிற்சிப் போட்டி தொடங்கவில்லை. இந்நிலையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் போட்டி அட்டவணை தொடர்பான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.

சென்னையில் ஷபார்முலா 4 கார்பந்தயம் நடத்த இரவு 8 மணிக்குள் சான்று பெற உயர்நீதிமன்றம் கெடு வைக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்குள் சான்று பெறாவிட்டால் பந்தயத்தை தள்ளிவைக்க வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். சான்று பெறுவதற்கான அவகாசத்தை இரவ 9 மணி வரை நீட்டிக்க தமிழக அரசு வாதமிட்டது. இந்நிலையில் இரசு 8 மணிக்குள் சான்று பெற உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *