சென்னை தீவுத்திடலில் பார்முலா 4 கார் பந்தயம் நடத்த எப்.ஐ.ஏ. (FIA) சான்றிதழ் பெற கால நீட்டிப்பு கோரி, சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ளது. மழை காரணமாக எப்.ஐ.ஏ. சான்றிதழ் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால்4 மணி நேர கால நீடிப்பு வழங்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.