தமிழகத்தில் 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டில்லியில் இருந்தவாறு காணொளியில் தொடங்கி வைத்தார்.
சென்னை எழும்பூர் – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது. எழும்பூர் – நாகர்கோவில் இடையேயான வந்தேபாரத் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை வழியே இயக்கப்படும்.
மதுரை – பெங்களூரு ரயில் கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் நிறுத்தங்களில் நின்றுசெல்லும். பிரதமர் இன்று சேவையைத் தொடங்கி வைத்த நிலையில் செப்டம்பர். 2 முதல் ரயில்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – நாகர்கோவில் ரயில்புதன்கிழமை தவிர மற்ற நாட்களில் எழும்பூரில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50மணிக்கு நாகர்கோவில் சென்றடையும் பின்னர், நாகர்கோவிலில் இருந்து மதியம் 2.20 மணிக்குப் புறப்பட்டு, இரவு 11 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
16 பெட்டிகளைக் கொண்ட இந்தரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. நாகர்கோவிலுக்கு ‘ஏசி’ சேர் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.1,760-ம்,எக்ஸ்கியூடிவ் கோச்சில் ஒருவருக்கு ரூ.3,240 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், மதுரை – பெங்களூரு இடையிலான வந்தே பாரத் ரயில், மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு கண்டோன்மெண்ட் சென்றடையும். பின்னர், அங்கிருந்து மதியம் 1.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 9:45 மணிக்கு மதுரை வந்தடையும்.
8 பெட்டிகளைக் கொண்ட இந்தரயிலில். ‘ஏசி’ சேர் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.1,575-ம், எக்ஸ்சிகியூடிவ் கோச்சில் பயணம் செய்ய ஒருவருக்கு ரூ.2,865-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.