சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதுக்கோட்டையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கும் தினகரனுக்கும் இடையே நடந்த பிரச்சனையின் போது சபாநாயகராக இருந்த தனபாலை முதல்வராக ஆக்கலாம் என்று நான் சசிகலாவிடம் கூறி முன்மொழிந்தேன் .அப்போது திருமாவளவன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஆனால் 35 தலித் எம்எல்ஏக்கள் அதற்கு ஒத்துவரவில்லை எதிர்ப்பு தெரிவித்தனர்/
எடப்பாடிக்கு அட்வைஸ் செய்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை, அவர் என்னை விட சீனியர்.எடப்பாடி பழனிச்சாமி உள்ளடக்கிய அதிமுக ஒருங்கிணைப்பு 2026க்குள் நடக்கும்.எந்த அதிமுக தலைவரோ, நிர்வாகியோ என்னிடம் தொடர்பில் இல்லை
தமிழக அரசியல் ஒரு காலத்தில் நன்றாக இருந்தது. காலத்தின் கட்டாயமா அல்லது கலியுகமா என்று தெரியவில்லை ,தற்போது தமிழக அரசியலில் தனி மனித தர மற்ற விமர்சனங்கள் செய்யப்படுகிறதுதேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் செய்ய வேண்டும் மற்ற நேரங்களில் அனைவரிடம் சுமூகமாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.