தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் 2 வார கால சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்பிங்ஸ் ஹெல்த்கேர் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதன்படி மதுரை எல்காட்டில் தொழில் நுட்பம் மற்றும் உலகளாவிய விநியோக மையம் அமையஉள்ளது. இதன்
மூலம் 700 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டிஆர்பி ராஜா , இன்பிங்ஸ் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி ராதிகா டாண்டன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதே மாநாட்டில் மைக்ரோசிப் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி சென்னையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைகிறது.இதன் மூலம் 1500 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். ஈல்ட் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையே இந்த மாநாட்டில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் கோவை சூலூரில் குறைகடத்தி உபகரணங்களுக்கான தயாரிப்பு மேம்பாடு மற்றும் உற்பத்தி வசதி ஏற்படுத்தப்படும். இதில் 300 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். இதுபோல மேலும் பல நிறுவனங்களுடன் தொழில் தொடர்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் மேலும் 2ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை பெறுவார்கள்.