Skip to content
Home » செருப்பு அனுப்பி வைக்கிறேன் ……விஷாலுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டி

செருப்பு அனுப்பி வைக்கிறேன் ……விஷாலுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஸ்ரீ ரெட்டி

  • by Senthil

நடிகர் விஷால்  நேற்று  48-வது பிறந்த நாளை  கொண்டாடினார். அப்போது பத்திரிகையாளர்களை சந்திதத அவர் ” பெண்களை மதிக்காமல் இருக்கும் சிலர் தான் பெண்களிடம் தவறாக நடக்கிறார்கள்.  யாராவது வந்து உங்களை அட்ஜெஸ்மெண்ட்க்கு அழைத்தால் அவர் யாராக இருந்தாலும் சரி, முதலில் அப்படிக் கேட்பவர்களைச் செருப்பால் அடியுங்கள். இதற்காக ஒரு கமிட்டி அமைக்கப்போகிறேன்” என மிகவும் ஆவேசத்துடன் கூறியிருந்தார்.

விஷால் பேசியதைப் பார்த்துக் கடுப்பான நடிகை ஸ்ரீ ரெட்டி தன்னுடைய சமூக வலைத்தளத்தில்  விஷாலை  கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். விஷால் பற்றி அவர் கூறியிருப்பதாவது” விஷால் நீங்கள் ஒரு பெண்ணைப் பற்றிப் பேசும்போது, ​​உங்கள் நாக்கு ஊடகங்கள் முன் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். என்ன பேசுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு பேசவேண்டும்.

உலகத்துக்கே தெரியுமே நீ எவ்வளவு  பெரிய பிராடு என்று. இவ்வளவு உதாரணங்களை ஊடகங்களுக்கு முன்னால் சொல்லிவிட்டு உங்களை மரியாதைக்குரியவன் என்று நினைக்காதே.உங்கள் வாழ்வில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணும் உங்களை விட்டுச் சென்றது ஏன்?உங்கள் நிச்சயதார்த்தம் ஏன் ரத்து செய்யப்பட்டது?இந்த கேள்விக்கு அடுத்த முறைப் பதில் சொல்லுங்கள். என்னிடம் நிறையச் செருப்புகள் உள்ளது. உனக்கு வேண்டுமா?” எனவும் கடும் கோபத்துடன் விஷால் பேசியதற்கு ஸ்ரீ ரெட்டி பதில் அளித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!