ஆந்திராவில் ஜெகன்மோகன் தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான எம். வெங்கட ரமணா, பி.மஸ்தான் ராவ் ஆகியோர் அந்த கட்சியில் இருந்தும், எம்.பி. பதவியில் இருந்தும் ராஜினாமா செய்தனர்.
தற்போதைய ஆளுங்கட்சியான தெலுங்க தேசம் கட்சியில் இருவரும் விரைவில் சேர உள்ளனர். அப்போது அவர்களுக்கு மீண்டும் அதே ராஜ்யசபா பதவி வழங்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.