சீனாவை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் உட்பட எட்டு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் அரசுத் தலைவா்கள் குழுவுக்கு (சிஹெச்ஜி) தற்போது பாகிஸ்தான் தலைமை வகிக்கிறது. இக்குழுவின் மாநாடு, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் வரும் அக்டோபரில் நடைபெறவுள்ளது.
எந்தெந்த நாடுகள் கலந்து கொள்கின்றன என்பது பற்றிய தகவல்கள் விரைவில் தெரிவிக்கப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார். காஷ்மீா் பிரச்னை மற்றும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் இரு நாடுகள் இடையிலான உறவுகள் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ள சூழலில், பிரதமா் மோடிக்கு பாகிஸ்தான் இந்த அழைப்பை விடுத்துள்ளது. அதை ஏற்று பிரதமர் மோடி பாகிஸ்தான் செல்வாரா அல்லது பாகிஸ்தான் அழைப்பை ஏற்று செல்வாரா என்பது விரைவில் தெரியவரும்.