தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்களை அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தி அளித்தனர்.
திருச்சிராப்பள்ளி சுங்கத் தடுப்பு ஆணையரகம் அரியலூர் ரெட்டிபாளையத்தில் உள்ள M/s அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ் உலையில் எரித்து ரூ.265.44 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் மற்றும் சைக்கோட்ரோபிக் பொருட்களை வெற்றிகரமாக அழித்தனர். 16.800 கிலோ கஞ்சா, 4.730 கிலோ ஹாஷிஷ் ஆயில், 23.420 கிலோ சூடோபெட்ரின், 39 கிலோ மெத்தாம்பெட்டமைன் மற்றும் 149 கிலோ ஹாஷிஷ் ஆகியவை அழிக்கப்பட்ட போதைப்பொருள் ஆகும்.
மேற்கூறியவை தவிர, ரூ.7,00,000/- மதிப்புள்ள 702 அட்டைப்பெட்டி சிகரெட்டுகள் (மொத்தம் 1,40,500 குச்சிகள்) ரூ.2,70,840 மதிப்புள்ள 6.10 கிலோ குங்குமப்பூ, 258 மின்-சிகரெட்டுகள், 128 கிலோ கசகசா, 704 சோமாட்ரோபின் ஊசி குப்பிகள் மற்றும் 694 கிக்ட்ரோபின் குப்பிகள் (வளர்ச்சி ஹார்மோன்கள்) எரித்தல் மூலமாகவும் அழிக்கப்பட்டன.