தமிழ்நாடு கவர்னர், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று மாலை கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பார். இதில் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டும் நாளை கவர்னர் தேநீர் விருந்து அளிக்கிறார். இதில் கலந்து கொள்ளமாட்டோம் என்று காங்கிரஸ்,மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் அறிவித்துள்ளன. திமுகவின் நிலை குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.