திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்தது. கூட்டத்துக்கு அவைத்தலைவர் பேரூர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் கே. என். நேரு , மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி மற்றும் அருண் நேரு எம்.பி, பழனியாண்டி எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தர்மன் ராஜேந்திரன், மேயர் அன்பழகன், அந்தநல்லூர் துரைராஜ், கிராப்பட்டி செல்வம், முத்து செல்வம், விஜயா ஜெயராஜ் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
முப்பெரும் விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து அமைச்சர் கே.என். நேரு உரையாற்றினார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் முதல்வரின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற இப்போதே பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் கழகத்தின் முப்பெரும் விழாவினை நமது மாவட்டத்திலுள்ள மாவட்டம், மாநகரம், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழகங்களில் கழக கொடியேற்றியும், நலத்திட்ட
உதவிகள் வழங்கியும் மிகச்சிறப்பாக கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது.
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவினை நமது மாவட்டத்திலுள்ள பல்வேறு நிர்வாகிகள், அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவினை அனைவரும் போற்றிடும் வகையில் மிகவும் எழுச்சியுடன் கொண்டாடுவது.
நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கழக வேட்பாளர் மற்றும் தோழமைகட்சி வேட்பாளர்களை வெற்றிபெற செய்த கழக தோழர்களுக்கு கோடான கோடி நன்றியினை தெரிவிக்கின்றோம். இதேபோல் நடைபெற இருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் தலைமை கழகம் அறிவிக்கின்ற வேட்பாளர்களை உறுதியாக வெற்றிபெற வைத்து மாண்புமிகு தளபதி அவர்களின் கரத்தை வலுபெற வைப்போம்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.