கேரளாவில் திரைத்துறையில் பெண்களுக்கு ஏற்பட்ட பாலியல் டார்ச்சர் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி தாக்கல் செய்த அறிக்கையை தொடர்ந்து பல நடிகைகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் தென்னிந்திய சினிமா நடிகர்கள் சங்க பொதுச்செயலாளர் நடிகர் விஷால் இது தொடர்பாக கூறும்போது, தமிழ்நாட்டிலும் நடிகைகளுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து விசாரிக்க 3 நாளில் ஒரு கமிட்டி அமைக்கப்படும். தமிழ்நாட்டிலும் இது போன்ற நடக்கவில்லை என்று நான் சொல்லவில்லை. நடிகைகளுக்கு யாரேனும் பாலியல் தொந்தரவு அளித்தால் செருப்பால் அடியுங்க. யாராவது தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டால் புகார் அளிக்கலாம். இது தொடர்பாக 10 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அதில் நடிககைள் இடம்பெறுவார்கள். அந்த கமிட்டி விசாரித்து நடவடிக்கை எடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.