Skip to content
Home » தொடரும் காற்று மாசு.. டில்லி மக்களின் ஆயுள் குறையுது..

தொடரும் காற்று மாசு.. டில்லி மக்களின் ஆயுள் குறையுது..

டில்லியில் நிலவும் காற்று மாசு குறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் (EPIC) எனர்ஜி பாலிசி இன்ஸ்டிடியூட் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை..  வட இந்திய சமவெளிகளில் மிகவும் மாசுபட்ட பகுதிகளில் ஒன்றான டில்லியில் வசிக்கும் 1.8 கோடி மக்கள் காற்றுமாசுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் டில்லிவாசிகளின் ஆயுட்காலம் சுமார் 12 ஆண்டுகள் குறைகிறது. தற்போதைய மாசு அளவுகள் நீடித்தால், இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும் 8.5 வருட ஆயுட்காலத்தை இழக்க நேரிடும். இந்தியாவின் தலைநகரம் மற்றும் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான டில்லி, உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது. டில்லியில் 40% அதிகமாக காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. சுவாச மண்டலத்தில் ஆழமாக ஊடுருவி, சுவாச பிரச்னைகளை தூண்டக்கூடிய பி.எம்., நுண்துகள்கள், கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தும். சமீபத்திய ஆண்டுகளில் காற்று மாசை கட்டுப்படுத்துவதில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அனுமதிக்கப்பட்ட அளவை எட்டுவதற்கு இன்னும் தீவிர நடவடிக்கை தேவை. உலக சுகாதார அமைப்பின் கணக்குப்படி படி, பி.எம்., – 2.5 எனப்படும் நுண்துகள்கள், 1 கன மீட்டருக்கு, 5 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டும். இது, இந்தியாவில் 2022ல், 9 மைக்ரோ கிராமாக உள்ளது. கடந்த 2021 உடன் ஒப்பிடுகையில், 19.3 சதவீதம் குறைந்துள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!