Skip to content
Home » அமெரிக்காவில் ஆரத்தி எடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

அமெரிக்காவில் ஆரத்தி எடுத்து முதல்வர் ஸ்டாலினுக்கு வரவேற்பு

  • by Senthil

முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று முன் தினம் இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். இதன்படி தமிழகத்திற்கு பல்வேறு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்காவில் அரசு முறைப் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, சிகாகோவில் உள்ள பல முக்கிய நிறுவனங்களின் தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். அப்போது முதல்வரின் தலைமையில் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.

இதற்காக நேற்று  சான்பிரான்சிஸ்கோ நகரம் சென்றடைந்த முதல்வர் ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழ் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  தமிழ் மரபுப்படி ஆரத்தி எடுத்து வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் இளைஞர்கள் தமிழ் வெல்லும், தமிழ் வாழ்க என்ற பேனர்கள் ஏந்தி வரவேற்புக்கு வந்திருந்தனர்.

அமைச்சர் டிஆர்பி ராஜா ஏற்கனவே  சான்பிரான்சிஸ்கோ நகரம் சென்று  இருந்தார். அவரும் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நடிகர் நெப்போலியனும் இந்த வரவேற்பில் பங்கேற்று முதல்வருக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

இன்று சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர் சந்திப்பில் பங்கேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகிறார்.31ம் தேதி புலம்பெயர்ந்த தமிழர்களை முதல்வர் ஸ்டாலின்  சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2ம் தேதி சான்பிரான்ஸ்கோவில் இருந்து சிகாகோ செல்கிறார். அங்கு 10 நாட்கள் முக்கிய நிறுவன முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்து, தொழில் தொடங்க முதல்-அமைச்சர் அழைப்பு விடுகிறார். அமெரிக்கா பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14ம் தேதி  முதல்வர் சென்னை திரும்புகிறார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!