கும்பகோணம் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இதில் ஒரு தரப்பு மாணவர்கள் தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் தங்களை திட்டியதாக புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த ஒருவாரமாக போராடி வந்த நிலையில் இன்று போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கத்துடன் மாணவர்கள் செயல்பட்டதாக தெரிகிறது. இதை அறிந்த கல்லூரி முதல்வர் மாதவி இன்று முதல்க ல்லூரி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவித்தார். இதனால் இன்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கல்லூரி முன் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.