அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு இன்று விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணியை ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தொடங்கி வைத்தார். பேரணியில் வாக்களிப்பதன் அவசியம் வாக்களிப்பது எனது உரிமை வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம். 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியல் பெயர்
சேர்க்க வேண்டும் . அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் எழுதியவாறும் முழக்கங்கள் செய்தவாரும் பேரணியாக சென்றனர். பள்ளி வளாகத்தில் தொடங்கிய பேரணி நீதிமன்றம் பேருந்து நிலையம் அண்ணா சிலை, நான்கு ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று பள்ளி வளாகத்தில் நிறைவடைந்தது பேரணியில் 300 -க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.