தமிழகத்தில் 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. நீர்வளத்துறை செயலாளர் மணிவாசனுக்கு விழிப்புணர்வு ஆணையர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆணையர் பதவி கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
வருவாய்த்துறை செயலாளர் அமுதாவுக்கு, வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடா் மேலாண்மை துறை முழு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் முருகானந்தம் பிறப்பித்துள்ளார்.