போக்குவரத்து கழகம் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் எவ்வாறு இருந்தது என்றும், தற்போது உள்ள திமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்திற்கு போதிய நிதி ஒதுக்காமல் பல மாதங்களாக ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவை தொகை வழங்கப்படவில்லை என்றும், கருணை அடிப்படையில் நியாயமாக வழங்கக் கூடிய வேலை வாய்ப்புகளை கூட வழங்கவில்லை என்ற பல குற்றச்சாட்டுகளை துண்டு பிரசுரமாக அச்சிட்டு அதனை இன்று அண்ணா தொழிற்சங்கப் பேரவை சார்பில் கரூர் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து கழக பணியாளர்களிடம் வழங்கினர். அண்ணா தொழிற்சங்கப் பேரவை கரூர் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு தலைமையிலான தொழிற்சங்க நிர்வாகிகள் பேருந்து நிலையத்திற்குள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சராக எம்.ஆர். விஜயபாஸ்கர் இருந்த பொழுது இந்த போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது
அதிமுக 5 ஆண்டு காலம் ஆட்சி பொற்காலட்சியாக போக்குவரத்து துறை சிறப்பாக செயல்பட்டது. தற்பொழுது திமுக ஆட்சியில் உதிரி பாகங்கள் கிடைக்கவில்லை, தொழிலாளர்கள் நசுக்கப்படுகின்றார்கள், புதிய பேருந்துகள்
விடுகிறோம் என்று சொல்லிவிட்டு கிராமப்புறங்களில் புதிய பேருந்துகள் இயக்குவது கிடையாது மழைக்காலங்களில் பேருந்துக்குள் பயணிகள் மழை நீரில் நனைந்து கொண்டே செல்கின்றனர் போக்குவரத்து துறைக்காக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் 2000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருந்தார். அதே போல ஆதிமுக ஆட்சியில் 1720 கோடி ரூபாய் ஒதுக்கி இருந்தார் அந்த 1720 கோடி ரூபாயை தற்பொழுது திமுக அரசு ஒதுக்கி இருக்கிறது
36 கோடி ரூபாயை போக்குவரத்து துறையில் ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கி வருகிறார்கள் அது எத்தனை தொழிலாளர்களுக்கு வழங்குவார்கள் என்பது தெரியவில்லை. இன்று போக்குவரத்து துறை மிக மோசமாக உள்ள நிலையில் உள்ளது. அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்து துறைக்கு போராடித் தந்த நிதியை தற்பொழுது திமுக அரசு வழங்கி வருகிறது. புதிதாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை தொழிலாளர்கள் நசுக்கப்படுகிறார்கள் இதனை கண்டித்து கரூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களாக அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது என்றார்.