கொல்கத்தா மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்ட கொல்லப்பட்டார். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் இன்று தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தலைமை செயலகம்நோக்கி பேரணியாக சென்றவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தினர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
தலைமைச் செயலகம் நோக்கி ஆர்ப்பாட்ட பேரணி தொடங்குவதற்கு முன்னதாக மாணவர் அமைப்புகளைச் சேர்ந்த முக்கியமான 4 மாணவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை கைது செய்தது. இதற்கிடையே 4 மாணவர்கள் காணாமல் போய்விட்டார்கள் என பாஜக தலைவர்கள் புரளியை கிளப்பி விட்டனர். அதை போலீசார் மறுத்து உள்ளனர்.
இந்த நிலையில் ஹவுரவின் சந்திரகாச்சி பகுதியில், காவல்துறையினரின் தடுப்பு மீது ஏறி மாணவர்கள் ஆவேசமாக முழக்கமிட்டனர். தடையை மீறி பேரணியாக சென்றதால் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றனர். அதில் பலன் கிடைக்காததால் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைத்தனர்.