Skip to content
Home » எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

எடப்பாடி பழனிசாமி வழக்கு செப்.19க்கு தள்ளிவைப்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது  மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன்  தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக  செலவிடவில்லை என புகார் கூறினார். இதை எதிர்த்து தயாநிதிமாறன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இன்று எடப்பாடி பழனிசாமி,  சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு கோா்ட்டில்  ஆஜரானார். அப்போது  நீதிபதி, இந்த வழக்கு குறித்து என்ன கூறுகிறீர்கள் என கேட்டார். அதற்கு எடப்பாடி, இந்த வழக்கை மறுக்கிறேன். வழக்கை நடத்த விரும்புகிறேன் என்றார்.

அதைத்தொடர்ந்து வழக்கை  வரும் செப்டம்பர் 19ம் தேதிக்கு  நீதிபதி ஒத்திவைத்தார்.  பின்னர் எடப்பாடி கோர்ட்டில் இருந்து கிளம்பி சென்றார். இந்த வழக்குக்காக காலை 10.20 மணி அளவில் எடப்பாடி கோர்ட்டுக்கு வந்தார். 10.50க்கு புறப்பட்டு சென்றார். எடப்பாடி வருகையையொட்டி கோர்ட்  பகுதியில் அதிமுகவினர் பெருமளவில் திரண்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!