Skip to content
Home » இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

இலங்கையில் இந்திய, சீன போர்க்கப்பல்கள் முகாம்…..பரபரப்பு

  • by Senthil

இந்திய கடற்படை போர்க்கப்பலான ‘ஐ.என்.எஸ்.மும்பை’ 3 நாட்கள் பயணமாக நேற்று கொழும்பு துறைமுகம் சென்றடைந்தது. அந்த கப்பல், இலங்கையில் உள்ள துறைமுகத்துக்கு செல்வது இதுவே முதல்முறை. அதே சமயத்தில் இந்த ஆண்டு இலங்கை துறைமுகத்துக்கு இந்திய கப்பல் செல்வது இது 8-வது தடவை ஆகும். 163 மீட்டர் நீளம் கொண்ட இக்கப்பலில் 410 ஊழியர்கள் உள்ளனர். கடற்படை வழக்கப்படி, இலங்கை கடற்படை வரவேற்பு அளித்தது.

3 நாட்களும் ஊழியர்கள் இலங்கையை சுற்றி பார்ப்பார்கள். இலங்கை கடற்படையுடன் சேர்ந்து, யோகா, கடற்கரையை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளையும் செய்வார்கள்.

29-ந் தேதி கப்பல் அங்கிருந்து புறப்படும். முன்னதாக, நேற்று காலை சீன கடற்படையின் 3 போர்க்கப்பல்களும் அதே கொழும்பு துறைமுகம் வந்தன. அவை அங்கு நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!