ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் ஜார்க்கண்ட் முதல்வருமான ஹேமந்த் சோரன், பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பிப்ரவரியில் சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார். கடந்த ஜூனில் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வேண்டி சம்பாய் சோரன் பதவி விலகினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் சிலருடன் டில்லி சென்றார் சம்பாய் சோரன், தொடர்ந்து பா.ஜ.,வில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாயின. இதனிடையே ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் அதிருப்தியில் உள்ள சம்பாய்சோரன் தனது அடுத்த நகர்வாக புதிய கட்சியை துவக்கி பா.ஜ.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை எதிர்கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியாகின. . இந்நிலையில் வரும் 30-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ., வில் இணைய உள்ளதாகவும், ராஞ்சியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் பா.ஜ., தலைவர்களை சந்தித்து அவர்கள் முன்னிலையில் சம்பாய் சோரன் பா.ஜ, வில் ஐக்கியமாக திட்டமிட்டுள்ளதாக அசாம் பா.ஜ, முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா உறுதி செய்துள்ளார்