Skip to content
Home » த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

த.நு.வாணிப கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர்கள் கரூரில் திடீர் தர்ணா..

  • by Senthil

கரூர் தொழில் பேட்டையில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்கத்தினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்

மேலும் வெளிமாநில தொழிலாளர்களை அனுமதிக்க கூடாது ஒப்பந்த அடிப்படையில் பணிகள் வழங்ககூடாது என கோரிக்கை வலியுறுத்தி தர்ணாவில் ஈடுபட்டனர்.

மேலும் இங்கு வேலை செய்யும் தின கூலி தொழிலாளர்கள் 2018 இல் இருந்து தொடர்ந்து பல்வேறு சூழ்நிலைகளில் பணிபுரிந்து வருகின்றனர் மேலும் கொரோனா காலகட்டங்களில் கூட பணியாற்றி வந்துள்ளார்கள்

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர்வோர் வாகணிப கழகத்தின் மண்டல மேலாளர் மூலம் வெளி மாநில தொழிலாளர்களை வைத்து வேலை பார்க்க முயற்சித்து வருவதாக குற்றம் சாட்டினார்கள்.

தமிழ்நாட்டில் பிறந்த எங்களுக்கு வேலையில்லை எங்கள் வாழ்வாதாரத்தை கெடுப்பது ஏன் மேலும் நாங்கள் அனைவரும் தினக்கூலியை நம்பி தான் பிழைப்பு நடத்தி வருகிறோம் எங்களுடைய அரைக்கஞ்சி குடிப்பது கூட இந்த

நிர்வாகம் தடுக்க நினைக்கிறது தொடர்ந்து இந்த தொழிலாளர்களை வஞ்சிப்பது ஏன் என்றனர்.

மேலும் டன்னுக்கு 67 ரூபாய் கொடுப்பதாகவும் அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நிரந்தர தொழிலாளர்கள் மற்றும் தற்காலிக தொழிலாளர்கள் ஊதியமாக பெற்று வருகிறோம். ஆனால் ஒப்பந்ததாரர் முறையில் 50 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி விட்டு அவர்கள் மூலம் வெளி மாநில தொழிலாளர்களை பணியமர்த்த பார்க்கிறார்கள். இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது என்றனர்

ஆனால் இதுபோன்று நிகழ்வு எந்த மாவட்டத்திலும் நடைபெறவில்லை குறிப்பாக கரூர் மாவட்டத்தில் மட்டும் நடைபெற்று வருவதாகவும் குற்றம் சாட்டினார்கள். தொடர்ந்து தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழகம் நிர்வாகம் தொடர்ந்து எங்களை அடிமைத்தனமாக நடத்துகின்றனர். மேலும் தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக மனு அளித்துள்ளோம் விரைவில் நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!