Skip to content
Home » கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கரூர் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்..

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கரூர் அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் தங்க கவசம் அலங்காரம்.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று பல்வேறு கிருஷ்ணர் கோவில்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அண்ணாசாலை பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணர் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்ற அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் கிருஷ்ண பகவானுக்கு பட்டாடை உடுத்தி, பல்வேறு வண்ண மாலைகளுடன், துளசி மாலை அணிவித்து தங்க கவசம் அணிவித்த பிறகு சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாரதனை நடைபெற்றது.

கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் கிருஷ்ணர் சுவாமிக்கு கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்கார நிகழ்ச்சியை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!