Skip to content
Home » சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்!….

சர்ச்சை பேச்சுக்கு பின் தனுஷுடன் ஒரே மேடையில் சிவகார்த்திகேயன்!….

நடிகர் சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் அவருக்கு பல்வேறு உதவிகள் செய்தவர் தனுஷ். அவரது தயாரிப்பில் சிவகார்த்திகேயன் சில படங்கள் நடித்தார். அது அவரது கெரியரில் பெரிய அளவில் வளர்ச்சியை கொடுத்தது. அதன் பின் இருவருக்கும் வந்த கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர்.

Dhanush sivakarthikeyan

சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரித்த கொட்டுக்காளி படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன் தனுஷை தாக்கி பேசியதாக சர்ச்சை வெடித்தது.நான் தான் வளர்த்துவிட்டேன் என யாரையும் பார்த்து நான் சொல்லமாட்டேன். என்னை அப்படி சொல்லி சொல்லி பழகிவிட்டார்கள் என சிவகார்த்திகேயன் கூறினார். சிவகார்த்திகேயன் பேச்சுக்கு தனுஷ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை நன்றி மறந்தவர் எனவும் ட்ரோல் செய்தனர்.இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் இருவரும் ஒரே மேடையில் ஒன்றாக இருக்கும் போட்டோ ஒன்று வைரல் ஆகி வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *