அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், நாம் தமிழர் கட்சியின் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் .
பின்னர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது x தளத்திலிருந்து வெளியேறிய வருண்குமார் ஐபிஎஸ்க்கு சீமான் வாழ்த்து தெரிவித்தார். திமுகவும் பாஜகவும் வேறு வேறு அல்ல, பாஜகவில் 100 சதவீதம் இந்துக்கள் இருப்பதாக பாஜகவும், திமுகவில் 90 சதவீத இந்துக்கள் இருப்பதாக முதல்வரும் தெரிவித்துள்ளனர். இரண்டுக்கும் 10 சதவீதம் தான் வித்தியாசம் என கூறினார்.
விஜய் கட்சியின் மாநாட்டிற்கு என்னை அழைக்க மாட்டார். அழைக்கவும் கூடாது. அவரது கட்சி அவரது கட்சியின் தொடக்க விழாவிற்கு மற்றவர்களை அழைக்கவும் மாட்டார். அழைக்கவும் கூடாது என கூறினார். விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து கேட்டபோது, தனித்துப் போட்டி தான் என நான் முடிவெடுத்து இருக்கிறேன். அதே போல் எனது தம்பி தேர்தல் காலத்தில் என்ன முடிவு எடுக்கிறார் என்பதைப் பொறுத்து யோசிக்கலாம் என்று கூறினார்.
எனது கட்சி சார்பில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கு 50 தொகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன். ஆனால் செய்தியாளர்களிடம் இது குறித்து தெரிவிக்கவில்லை. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியா என்று கேட்டதற்கு, இதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என கூறினார்.