Skip to content
Home » காவிரி தீரத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி…கிரீன்நீடா முன்னெடுப்பு

காவிரி தீரத்தில் 1 கோடி பனை விதைகள் நடும் பணி…கிரீன்நீடா முன்னெடுப்பு

  • by Senthil

காவிரி நதிக்கரை ஓரங்களில் 1 கோடி பனை விதைகள் நடும் மிகப்பெரிய பணியை தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை,  கிரீன் நீடா  சுற்றுச்சூழல் அமைப்பு,  தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு,  தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து மேற்கொள்கிறது.

இதற்காக வரும் 1ம் தேதி பனை விதைகள் சேகரிக்கும்  பணியை  வரும் 1ம் தேதி மேற்கண்ட அமைப்புகள் தொடங்குகின்றன. பனைமரங்கள் அடர்ந்துள்ள இடங்களை  தேர்வு செய்து ஆங்காங்கே இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. பனை விதைகள்  ஓரளவு சேகரித்தவுடன்   ஆங்காங்கே  நடும் பணி மேற்கொள்ளப்படும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு  கிரீன் நீடா  தலைமை ஒருங்கிணைப்பாளர் மு. ராஜவேலு(99402 20986) மற்றும் தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர்  என். ஹரிகிருஷ்ணன்(90872 93339) ஆகியோரை தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!