கரூர், திருக்காம்புலியூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் விளையாட்டு திடலில் மாநில அளவிலான வில்வித்தை போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் கரூர், சென்னை, கோவை, திருச்சி, மதுரை, திருப்பூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களை சேர்ந்த சுமார் 200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
5 வயது முதல் அனைத்து வயதினரும் பங்கேற்ற போட்டியானது இந்தியன், ரீ-கர்வ்,
காம்பவுண்ட் ஆகிய மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.
வீரர், வீராங்கனைகள் இலக்கை நோக்கி, வில்லை நோ்த்தியாகச் செலுத்திய நிகழ்வு, அங்கு கூடியிருந்தவா்களை வியப்பில் ஆழ்த்தியது. தொடா்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.