ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கிறது. இதில் எடப்பாடி அணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படுகிறார். ஓபிஎஸ்சும் அங்கு வேட்பாளரை நிறுத்தலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு கொங்குநாடு இளைஞர் பேரவை கட்சி தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான தனியரசு, இன்று சென்னையில் ஓபிஎஸ் இல்லம் சென்று அவரை சந்தித்து பேசினார். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அவர் பேசியதாக தெரிகிறது. சசிகலாவின் தூதராக இவர் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.