தஞ்சாவூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக மத்திய அரசை கண்டு பயப்படுகிறது, திமுக எதற்கும் தயாரானவர்கள், தங்களது பதவியை காப்பாற்றி கொள்ள ராஜதந்திரம் என்ற பெயரில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கும் என்றும்
தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு கஞ்சா போன்ற போதை பொருள் கலாச்சாரம் தான். மாணவர்களையும் இளைஞர்களையும் குறி வைத்து கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது, இதை தடுக்க தமிழ்நாடு அரசு தவறிவிட்டது, வருங்கால சமுதாயத்தின் குரல்வலையை நெறிக்கும் செயல் , இதை
முதலமைச்சர் கடுமையான நடவடிக்கை எடுத்தால் தான் வருங்கால சமுதாயத்தை நல்ல ஒரு சமுதாயமாக உருவாக்க முடியும் என்று கூறினார்.
மேலும் சசிகலாவின் சுற்றுப்பயணம் குறித்து கேட்டதற்கு, அம்மாவின் தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என எல்லோரும் முயற்சி செய்வது இயற்கை. இதற்கு பழனிச்சாமி தடையாக இருக்கும் வரை இந்த முயற்சி பலிக்காது, தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் திமுகவிற்கு எதிரான சிறந்த கூட்டணியாக உள்ளது. மக்கள் விரோத திமுக அரசை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்து கொண்டிருக்கும். உறுதியாக அதில் வெற்றி பெறுவோம். அதிமுகவில் இரட்டை இலை சின்னம் இருப்பதால் தொண்டர்கள் சகித்துக் கொண்டு இருக்கிறார்கள். பழனிச்சாமியின் தவறான நடவடிக்கையை புரிந்து கொண்டு சுயநலத்தை புரிந்து கொண்டு இதற்கு தக்க முடிவு எடுப்பார்கள் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். இல்லையென்றால் 2026 பிறகு அம்மாவின் கட்சி இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும் என்றும் 2019 தேர்தலில் பிஜேபிக்கு எதிரான மனோபாவம் தமிழ்நாட்டில் இருந்தது, அது மாறி வருகிறது 2024 தேர்தலில் எங்களுடைய கூட்டணி 2ம் இடத்திற்கு வந்தது. இதே நிலையில் 2026 தேர்தலில் ஆட்சியை பிடிப்பதற்கான முயற்சிகளை செய்வோம் என்றும் பிஜேபி அரசியல் ரீதியாக திமுகவிடம் இணக்கம் காட்டவில்லை. மத்திய அரசிடம் போய் திமுக தாஜா செய்து குனிந்து – வளைந்து நிற்பதால் அவர்கள் வருகிறார்கள். அரசியல் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றும் மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.