புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் சிவகங்கை தொகதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் கலந்து கொண்டாார். கலெக்டர் அருணா முன்னிலையில் அவர், மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட 2 சக்கர வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் அப்தாப் ரசூல், சின்னத்துரை எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயலட்சுமி தமிழ்ச்செல்வன், மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.