Skip to content

தவெக கொடியில் சிக்கல் மேல் சிக்கல்…..சட்ட நிபுணர்களுடன் விஜய் ஆலோசனை

  • by Authour

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கினார். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். இந்த நிலையில் நேற்று  விஜய், தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார்.

அந்த  கொடியில் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் இரண்டு யானைகளும் வெற்றியைக் குறிக்கும் வகையில் வாகைப்பூவும் இடம்பெற்றிருந்தன.  தமிழக வெற்றிக் கழக பாடலையும் விஜய் அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக கொடி தொடர்பாக விஜய் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மனுவில், ஸ்பெயின் நாட்டை அவமதிக்கும் வகையிலும், இந்திய தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பாகவும் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஒருவர் இந்த மனுவை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்துள்ளார்.

முன்னதாக, விஜய் கட்சிக் கொடியில் யானை சின்னம் இடம் பெற்றுள்ளதால் அதனை நீக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சி கொடுக்க இருக்கிறது.  தங்கள் சின்னமும் யானை. எனவே நீங்கள் கொடியில் போட்டுள்ள யானை படங்களை நீக்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

விஜய் கட்சி கொடி அறிமுகப்படுத்திய நிலையில் அவருக்கு மேலும் பல சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது.இது குறித்து நடிகர் விஜய்  சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!