திருச்சி ஆர்.சி.மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனுடையோர் தோழமை விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள், நலத்திட்ட உதவிகள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு நினைவுப் பரிசினை வழங்கி மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் இன்று சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில், திருச்சி மறைமாவட்டம் மேதகு ஆயர் எஸ்.ஆரோக்கியராஜ். டி.எம்.எஸ்.எஸ்.எஸ்.இயக்குநர்
மற்றும் செயலர் அருட்பணி பெ.ஜான்செல்வராஜ், பொருளாளர் அருட்பணி.ஜெயராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் .சந்திரமோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.