கொடியை அறிமுகம் செய்து தவெக தலைவர் நடிகர் விஜய் பேசியதாவது:
மாநில மாநாடு ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கிறது. மாநாட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும். நீங்கள் கொண்டாடி மகிழ கொடியை என் நெஞ்சில் குடியிருக்கும் மக்கள் முன் கொடியை அறிமுகம் செய்ததில் பெருமையாக இருக்கிறது. இதுவரை நமக்காக உழைத்தோம். இனி தமிழ்நாட்டுக்காகவும், தமிழ் நாட்டு மக்களுக்காகவும் உழைப்போம். கொடிக்கு பின்னாடி ஒரு வரலாறு இருக்கு. அதையும், கொடிக்கான விளக்கத்தையும் , கொள்கைகளையும் விரைவில் சொல்வோம். ஒரு சந்தோசமா, கெத்தா, கொண்டாடுவோம். இதை ஒரு கட்சிக்கான கொடியாக பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான கொடி. வருங்கால வெற்றிக்கான கொடி.
இந்த கொடியை தமிழ்நாடு முழுவதும் நான் சொல்லமலே நீங்கள் ஏற்றிவிடுவீர்கள். ஆனாலும் நீங்கள் முறைப்படி அனுமதி பெற்று கொடி ஏற்றுங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.